fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

வைபவ் – பல்லக் லால்வானி நடித்த சிக்ஸர்

                வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் படத்திற்கு பிறகு  பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறப்புக் காட்சியில் நடித்து இருந்தார்.  தற்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன. ஆர். கே. நகர், காட்டேரி ஆகிய படங்கள் ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது.  இப்பொழுது இவர் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.  இப்படத்திற்கு சிக்ஸர் எனப் பெயர் வைத்து உள்ளனர்.  சிக்ஸர் படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்து இருக்கிறார்.  

வைபவ் பல்லக் லால்வானி நடித்த சிக்ஸர்

சிக்ஸர் எனப் பெயர் வைத்து இருப்பதால் கிரிக்கெட் சம்பந்தமான படம் என நினைக்க வேண்டாம்.  இப்படத்திற்கும் கிரிக்கெட்டிற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது.  ஆனால் சிக்ஸ் என்ற வார்த்தைக்கும் படத்திற்கும் அதிக அளவு தொடர்பு உள்ளது என தயாரிப்பாளர்கள் கூறி இருக்கின்றனர்.  சிக்ஸர் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.  இப்படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

Related posts

புலி பதுங்குவது பாய்வதற்காகத் தான் ! சூர்யா பற்றி சிவக்குமார் பேச்சு

TamilTwin India

சீரியியலில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன்

N N

டிடி மற்றும் ஆலியா மானசாவை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!!

N N