fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
வடிவேலு நடிக்கும் 'பேய் மாமா'
சினிமா

வடிவேலு நடிக்கும் ‘பேய் மாமா’

            காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு.  இவர் சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.  தற்போது இவர் பேய் மாமா என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க இருக்கிறார். 

இப்படம் முழுவதும் காமெடி படம் ஆகும்.  சக்தி சிதம்பரம் இப்படத்தினை இயக்க உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.  மேலும் இப்படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.  இந்த நிலையில் இப்படத்தினைப் பற்றி வந்த தகவல்கள் பொய்யானவை என்றும் தகவல்கள் வருகின்றன.

      கூடிய விரைவிலேயே சக்தி சிதம்பரம் மற்றும் வடிவேலு இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே இருவரும் இணைந்து வெளிவந்த படங்களில் உள்ள காமெடிகள் அனைத்தும் இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.  என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், வியாபாரி, இங்கிலீஷ்காரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பினை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் இருவரும் இணையும் படமானது அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அரசியல் போஸ்டர் அடிக்காதிங்க, ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு..!!

TamilTwin India

8 வருடத்திற்கு பிறகு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாவனா

TamilTwin India

”இறக்கம் இல்லாத” இயக்குனர்கள் கீர்த்தி பாண்டியனை கலாய்க்கும் ரசிகர்கள்

TamilTwin India