என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடிகர் ராஜ் கிரண் மூலம் அறிமுகமானவர் தான் வைகை புயல் வடிவேலு. அவர் நடிக்க திட்டமிட்ட படங்களின் தயாரிப்பாளர் இப்பொழுது யோகி பாபுவை வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
திரையரங்குகளில் படத்தை பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்க உடல் மொழியும், வசன உச்சரிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர்களை உற்சாகப்படுத்த இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முடியும் என்று மாற்றி எழுதியவர் வடிவேலு. இவர் கதாநாயகனாக 2006 ல் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23- ம் புலிகேசி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்பு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நாயகனாக நடித்து தயாரித்த படங்களும் தோல்வியடைந்தன. இப்பொழுது ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதற்கு அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் என்று கூறியுள்ளனர். இதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் தர்ம பிரபு படத்தில் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை நடிக்க வைக்க பேசி வருக்கிறார்கள் பட தயாரிப்பாளர்கள்.