குருநகர் புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கலைவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை(21.01.2023) மாலை-05.45 மணி முதல் யாழ்.குருநகர் கலையரங்கத்தில் மேற்படி மன்றத்தின் தலைவர் விக்ரர் குமார் சுரேன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத் துறை வருகைதரு விரிவுரையாளர் அன்று யூலியஸின் நெறியாள்கையில் குருநகரைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றிய வீரன் தாவீது வடமோடிக் கூத்து சிறப்பு நிகழ்வாக அரங்கேற்றப்பட்டது.


இதேவேளை, குருநகர் மண்ணின் வரலாற்றில் முதன்முறையாக மேடையேற்றப்பட்ட இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த பெருமளவான பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)