Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்வல்லிபுர மாயவனுக்கு 24 ஆம் திகதி கொடியேற்றம்

வல்லிபுர மாயவனுக்கு 24 ஆம் திகதி கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா எதிர்வரும்-24 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் 17 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் அடுத்தமாதம்-1 ஆம் திகதி சனிக்கிழமை குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 3 ஆம் திகதி திங்கட்கிழமை துகில் திருவிழாவும், 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
பாம்புத் திருவிழாவும் நடைபெறும்.

5 ஆம் திகதி புதன்கிழமை கம்சன் போர்த்திருவிழாவும், 6 ஆம் திகதி வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும், 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 8 ஆம் திகதி சனிக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை கேணித் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular