fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » வடமராட்சி முள்ளியில் துப்பாக்கிச் சூடு: இரு இளைஞர்கள் படுகாயம்! (Photos)
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

வடமராட்சி முள்ளியில் துப்பாக்கிச் சூடு: இரு இளைஞர்கள் படுகாயம்! (Photos)

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளிப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(16) காலை நடந்துள்ளது.

மேற்படி பகுதியில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுப்பதற்காக அதிரடிப்படையின் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் அப்பகுதியின் ஊடாக பயணித்த கெப் வாகனம் ஒன்றை நிறுத்துமாறு அதிரடிப்படை அதிகாரிகள் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும், குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றமையால் சில்லுகளில் காற்றை இழக்கச் செய்ய ஆணிகள் அடங்கிய இரண்டு பலகைகளை வீதியில் இட்டுள்ளனர்.

இதனையடுத்து, கெப் சில்லுகளில் காற்று வெளியேறியுள்ளது. இதன்பின்னரும் டிப்பார் வாகனம் தொடர்ந்தும் பயணித்ததுடன் சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகளையும் மோதிச் செல்ல முயன்றதையடுத்து அதிரடிப்படையினர் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், கெப் பழுதடைந்த சில்லுகளுடன் தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வாகனத்தில் பயணித்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப் படை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தொிவித்தார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான வாகனத்தை தேடி பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இன்று பிற்பகல் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு காலத்தில் அதிகமாக கணவனால் தாக்கப்பட்ட பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

World News

நல்லூர் முருகன் ஆலயத்தின் விசேட பூஜை வழிபாடுகள்(Photos)

SL News

சித்திரைப் புத்தாண்டுக்கு மறுதினம் அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

TamilTwin