Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்உரும்பிராய் அன்னங்கை ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பம்(Photos)

உரும்பிராய் அன்னங்கை ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பம்(Photos)

யாழ்.உரும்பிராய் மேற்கு அன்னங்கை ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(09.8.2022) மாலை-6.30 மணியளவில் அபிஷேகம், விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் நடைபெற உள்ளது.

ஒன்பது தினங்களும் மாலை-6.30 மணியளவில் அபிஷேகம், பூசைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து இரவு-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையும், தொடர்ந்து வைரவப் பெருமான் வீதி உலா வரும் திருக் காட்சியும் இடம்பெறும்.

பத்தாம் திருவிழாவான எதிர்வரும் வியாழக்கிழமை(18.8.2022) காலை-9 மணிக்குத் தீர்த்த உற்சவமும், தொடர்ந்து மகேஸ்வர பூசையும்(அன்னதானம்) நடைபெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையின் தலைவர் எஸ்.கேசவன் தெரிவித்தார்.

இவ்வாலய அலங்கார உற்சவத்தில் ஐந்தாம் திருவிழாவான எதிர்வரும்- 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு, எட்டாம் திருவிழாவான 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு, 17 ஆம் திகதி புதன்கிழமை இரவு மற்றும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தீர்த்த உற்சவம் என்பன விசேட உற்சவங்களாகச் சிறப்பாக இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular