Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்உரும்பிராயில் பாரம்பரியக் கலை அம்சங்கள், வான வேடிக்கைகளுடன் களைகட்டிய ஞானவைரவர் திருவிழா(Photos)

உரும்பிராயில் பாரம்பரியக் கலை அம்சங்கள், வான வேடிக்கைகளுடன் களைகட்டிய ஞானவைரவர் திருவிழா(Photos)

யாழ்.உரும்பிராய் மேற்கு அன்னங்கை ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் ஐந்தாம் திருவிழா நாளான நேற்றுச் சனிக்கிழமை(13.8.2022) இரவு விசேட உற்சவமாக வெகுசிறப்பாக இடம்பெற்றது.

நேற்று மாலை-6.30 மணியளவில் அபிஷேகம், விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இரவு-7 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண அலங்காரங்களுடன், நாய் வாகனத்தில் அடியவர்கள் புடை சூழ வைரவப் பெருமான் எழுந்தருளி வந்தார்.

இரவு-7.45 மணியளவில் வெளிவீதி உலா ஆரம்பமானது. இதன்போது மேற்படி விசேட உற்சவத்தின் சிறப்பு நிகழ்வாக வட்டுக்கோட்டை கலாபூசணம் க.நாகப்பு மீணேஸ் தலைமையிலான கிராமியக் கலைக் ழுழுவினரின் பொம்மலாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கண்களைக் கவரும் பாரம்பரியக் கலை அம்சங்களுடனும் கோண்டாவில் தேவன்(ஆனந்தி) குழுவினரின் விசேட தவில், நாதஸ்வரக் கச்சேரியும், வண்ண வான வேடிக்கைகளும் எனத் திருவிழாவே வெகுவாகக் களைகட்டியது.

இதேவேளை, இவ்வாலயத்தில் வருடா வருடம் அலங்கார உற்சவத்தின் ஐந்தாம் திருவிழா விசேட உற்சவமாகச் சிறப்பு நிகழ்வுகளுடன் இடம்பெறுகின்ற போதிலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாப் பெருந் தொற்றுக் காரணமாக களைகட்டவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular