fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கூறும் உறியடி 2

உறியடி, இத்திரைப்படம் சாதி அரசியலையும் சாதிய ஒடுக்கு முறைகளையும் பற்றி வெளிவந்த திரைப்படம் ஆகும்.  இப்படத்தினை இளம் இயக்குநரான விஜய் குமார் இயக்கி இப்படத்தில் நடித்தும் இருந்தார்.  குறைந்த பொருள் செலவிலேயே தயாரான இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தினையும் இவரே இயக்குகிறார். இப்படத்தினை விஜய் குமார் இயக்கி அவரே நடிக்கவும் செய்கிறார்.  உறியடி 2 – ம் பாகத்தினை சூர்யா தயாரிக்கிறார்.  இவ்வகையான படங்களை இளைஞர்கள் இயக்குவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது.  இப்படங்களை பற்றி விஜய குமார் கூறியதாவது,

சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கூறும் உறியடி 2

சமூதாயத்தில் நடந்து வரக் கூடிய சாதி பிரிவினை மற்றும் சாதி ஒடுக்குமுறை இவை இரண்டினையும் பற்றி எடுத்துக் கூறும் திரைப்படம் தான் உறியடி.  சினிமா எனக்கு பிடித்து இருந்தது அதில் என் திறமையினைக் காட்டுவதாற்காக புதிய கோணத்தில் படத்தினை இயக்கி இருக்கிறேன்.  உறியடி படத்தின் தொடர்ச்சியாக உறியடி 2 அமையவில்லை.  முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடிக்கிறார்கள்.  உறியடி 2 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என அவர் கூறினார்.

Related posts

வித்தியாசமான புரமோஷனில் களமிறங்கிய பிகில் படக்குழு

N N

இயக்குனர் விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஜூனியர் என்.டி.ஆர்!!

N N

அசினின் கணவர் துவங்கியுள்ள பேட்டரி பைக் நிறுவனம்!!

N N