Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்வெகுசிறப்பாக நடந்தேறிய ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்பாள் மானம்பூத் திருவிழா(Photos)

வெகுசிறப்பாக நடந்தேறிய ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்பாள் மானம்பூத் திருவிழா(Photos)

யாழ்.ஊரெழு கிளானைப்பதி பர்வதவர்த்தனி மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமித் திருநாளை முன்னிட்டு நேற்றுப் புதன்கிழமை(06.10.2022) மானம்பூத் திருவிழா(வன்னி வாழைவெட்டு) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

மாலை-4.45 மணியளவில் அம்பாளுக்கு விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஶ்ரீவீரகத்தி விநாயர் ஆலயத்தை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து இவ் ஆலயத்தின் வடக்கு வீதியில் கிரியை  வழிபாடுகள் இடம்பெற்று மாலை-5.20 மணியளவில் வன்னி வாழைவெட்டும் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து பர்வதவர்த்தனி மனோன்மணி அம்பாள் வீரகத்தி விநாயகர் ஆலய முன்றலைச் சென்றடைந்து அங்கு சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.

சிறப்புப் பூசை வழிபாடுகள் நிறைவுற்றதும் மங்கள வாத்திய முழக்கத்துடன் அடியவர்கள் புடைசூழ அம்பாள் ஊர்வலமாகப் பலாலி வீதி ஊடாகப் புன்னாலைக்கட்டுவன் சந்தியை அடைந்து மீண்டும் அதே வழியாக தனது சந்நிதானத்தைச் சென்றடைந்தாள்.அதனைத் தொடர்ந்து அம்பாளுக்குப் பிராயச்சித்த அபிஷேக வழிபாடுகளும் இடம்பெற்றது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular