Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கை தொடர்பான பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு!

இலங்கை தொடர்பான பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(23) இடம்பெறவுள்ளது.

46/1 ஆம் இலக்க இலங்கை தொடர்பான பிரேரணை ஜெனீவா நேரப்படி இன்று காலை-09 மணியளவில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகளைச் சுட்டிக்காட்டி குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

மேற்படி பிரேரணையைப் பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண்டிநீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து சமர்ப்பித்திருந்தன.

இதேவேளை, 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெறவிருந்தது. எனினும், பிரேரணை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட நேரச் சிக்கல் காரணமாக இன்று வரை வாக்கெடுப்பு பிற்போடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular