fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உணவலங்காரம்

உங்கள் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!

ஹலோ நண்பர்களே! இன்றைய காலகட்டத்தில் ஒபிஸிட்டி ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒபிஸிட்டி அப்படினா அளவிற்கு அதிகமான உடல் எடை தான் ஒபிஸிட்டி என்பார்கள். நிறைய விஷயம் உள்ளது எடை குறைப்பதற்கு ஆனால் நான் உங்களுக்கு ஒரு அதிக செலவில்லாமல் விட்டில் இருந்தபடியே சுலபமாக எப்படி எடையை குறைப்பதுன்னு சொல்றேன். ‘பிளாக்ஸ் சீட்ஸ்’ என்கின்ற ‘ஆளி விதை’ இதை எப்படி இருக்கும் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆளி விதை - Flax Seeds for Medicine and Weight Loss

ஆளி விதை:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பத்து உணவுகளில் இந்த ஆளி விதை கட்டாயம் இடம் பெறும். இப்பொழுது எல்லா சூப்பர்  மார்கெட்களிலும் நாட்டு மருந்து கடைகளிலும், விதையாகவும் பொடியாகவும் கிடைக்கிறது. இது வெளிநாட்டில் விளையும் விலை உயர்ந்த உணவா ஆப்படின்னு எல்லாம் யோசிக்காதீங்க நம் நாட்டில் கிடைக்கும் வெள்ளரி விதை, பூசணி விதை போல இது லின்சன் என்னும் ஒரு வகையான தாவரத்தில் இருந்து  இந்த விதை விளைகிறது.

சாப்பிடும் முறை:

இந்த விதையை அப்படியே உட்கொண்டால் செரிமான கோளாறு உண்டாகலாம். அதனால் இதை வருத்து வைத்து கொண்டு வெறும் வாயில் மென்று சாப்பிடலாம். நாள் ஒன்றிற்கு 30கிராம் அளவிற்கு மட்டுமே இதை சாப்பிட வேண்டும். ஆளி விதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து நன்கு உப்பின பின்பு அப்படியே எடுத்து சாப்பிடலாம் அல்லது பாலுடன் ஊற வைத்த விதையை சேர்த்து நன்கு கிளற வெல்லம் அல்லது பன வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். இது ஒரு ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க உதவும்  உணவாகும். இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டால் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். எந்தளவிற்குன்னா ஓரே விரத்தில் 5 கிலோ எடையை குறைக்கலாம்.

சத்துகள்:

 • ஆளிவிதையில் நார்சத்து அதிகமாக உள்ளது. இதை சரியாக உட்கொண்டால் அதிக பசியை கட்டுபடுத்தி உடல் எடையைக் கச்சிதமாக வைக்க உதவுகிறது.
 • இதில் ‘லிக்னன்ஸ்’ எனப்படும் ஒருவகையான ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது இது நேரடியாக செல்களின் செயல்பாட்டை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை எரித்து உடலுக்கு ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
 • குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டது. இதில்  கலோரியின் அளவும் குறைவுதான்.
 • ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளன. அது பசியை கட்டுப்படுத்தி நிறைவைத் தந்துவிடும்.

உணவில் சேர்த்துக்  கொள்வது எப்படி:

 • சப்பாத்தி மாவு, தோசை மாவுகளில் ஆளிவிதைப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 • மில்க் ஷேக், ரத்தான, ஓட்ஸ், கஞ்சி, சூப், சாலட், ஜுஸ்,மோர்,குழம்பு ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.
 • நீங்கள் சாப்பிடும் ஒவ்வாரு உணவிலும் ஸ்னாக்ஸ்சிலும் ஒரு சில சிட்டிகை ஆளி விதை பொடியை சேர்த்து கொண்டு சாப்பிடு வந்தால் சீரான உடல் எடை பெற முடியும்.

பக்கவிளைவுகள்:

 • நார்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேயடியாக உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது.
 • இதை உட்கொள்ளும் நாட்களில் நீர் பருகவில்லை என்றால் மலசிக்கல், வாய்வு போன்ற உபாதைகள் ஏற்படுத்தும்.
 • கர்ப்ப காலங்களில் ஆரம்ப கட்டத்தில் இதை உடாகொள்வதை தவிர்க்க வேண்டும்.  இல்லையெனில் இது இனபெருக்க அமைப்பின் வளர்ச்சியை பாதிக்கும்.

இதன் பயன்:

 • மாதவிடாய் நின்ற பெண்கள், தொடர்ச்சியாக ஆளி விதையை உட்கொண்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி மாற்றங்களை தடுப்பதுடன், கருப்பை செயலிழப்பு ஏற்படுவதையும்  தடுக்கும்.
 • நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 
 • சருமம்,நரம்புகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
 • புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி,   புற்று நோயின் அபாயத்தைத் குறைக்கிறது.
 • முக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இந்த விதையை வாங்கி வீட்டிலேயே பொடி செய்து உபயோகிப்பது நல்லது. நீங்க எப்பவும் பயன்படுத்தற ஆயிலுக்கு பதிலா ஆளிவிதையில் தயாரித்த ஆயிலை யூஸ் பண்ணுங்க சிறந்த முறையில் எடையை குறைக்கலாம். இதை அனைத்தையும் நீங்களும் பயன்பெறுங்க.

Related posts

தக்காளி புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் மலிவு விலை மருந்து

N N

கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய உணவுக்கு பெரும் கிராக்கி

World News

சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம்!!

TamilTwin India