fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நான்கு மொழிகளில் வெளியாகும் உச்சகட்டம்

நடிகை தன்ஷிகா பரதேசி, கபாலி படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் பெற்றவர். தன்ஷிகா நடிப்பில் உச்சகட்டம் என்னும் படமானது தற்போது வெளியாக உள்ளது.  உச்சகட்டம் படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறார்கள். இந்த திரைப்படமானது வருகிற 22-ம் தேதி வெளியாக உள்ளது.

நான்கு மொழிகளில் வெளியாகும் உச்சகட்டம்

இந்தப் படத்தை கன்னட இயக்குனரான  சுதீல் குமார் தேசாய் இயக்கி உள்ளார். இயக்குனர் சுதீல் குமார் தேசாய்  திரில்லர் படங்கள் எடுப்பதில் மிகவும் புகழ் பெற்றவர். இப்படத்தில் நடிகை தன்ஷிகாவுடன் இணைந்து அனூப் சிங், கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ், தான்யா ஹோப், ஆடுகளம் கிஷோர், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். திரில்லர் படமாக உருவாகியுள்ள உச்சகட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2018-ம்  ஆண்டு இறுதியில் வெளியானது. போஸ்டரில்  பெண்  ஒருவர் கால்களில் ரத்த காயங்களுடன் நடந்து வரும் காட்சியை பார்க்கும் சாய் தன்ஷிகா பயத்தில் மிரண்டு போவது போல் வெளியாகி இருந்தது. மறுபடி வெளியான டிரெய்லரில் சர்ச்சையான காட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. அதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

‘சக்ரா’ ஆன் லைன் மோசடியை பிரதிபலிக்கும் படம் !

TamilTwin India

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவரும் கருப்பன் பட நாயகி

TamilTwin India

சன் ம்யூசிக்கில் நடந்த கொடுமை, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

TamilTwin India