கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் இன்று சனிக்கிழமை(03.12.2022) இடம்பெற்ற 20 வயதுப் பிரிவு பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி ச.தீபிகா 3.00 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன் வெள்ளிப் பதக்கத்தினையும் சுவீகரித்துள்ளார்.
இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை(02.12.2022) இடம்பெற்ற 20 வயது ஆண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவன் ஜெ. கஸ்மிதன் 3.90 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)