யாழில் சட்டவிரோதமான முறையில் 750க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக கூறுகையில், சட்டவிரோதமாக அதிகப்படியான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற 2 சந்தேக நபர்கள் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் பொன்னாலை சந்தியில் வைத்து, இவர்கள் கைது செய்யப்பட்டதாக, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஹயஸ் வாகனம் ஒன்றை சோதனை செய்ய முற்பட்ட போதே, அதில் இருந்து 750க்கும் மேற்பட்ட 180 மில்லிலீற்றர் கொள்ளளவு உடைய மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று போயா தினம் என்பதால், அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தோடு இந்த மதுபான போத்தல்கள் எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.