Thursday, December 1, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்எந்தமாதிரியான பொருளையும் கேக்காக மாத்தும் துருக்கி பெண்..!

எந்தமாதிரியான பொருளையும் கேக்காக மாத்தும் துருக்கி பெண்..!

நாம் பயன்படுத்தும் எந்தவொரு பொருட்கள் போலவும் கேக் செய்து அசத்தும் துருக்கி பெண் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மத்திய துருக்கியில் உள்ள அனாட்டோலியன் மாகாணத்தில் எஸ்கிசேர் பகுதியில் வசிப்பவர்தான் துபா.

துபாவின் தாய் தந்தை இருவருமே ஆகச் சிறந்த ஓவியர்கள், துபா சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

பெரியவள் ஆனதும் பெற்றோர்போலவே அவளும் சிறந்த ஓவியர் ஆனாள். ஓவியங்களை வரைவதைத் தொழிலாகக் கொண்டு வந்துள்ளார் துபா.

ஓவியத்தில் இருக்கும் திறமையை வேறு விதமாக காட்டலாம் என்று எண்ணி தான் விரும்பும் வரையும் ஓவியத்தை அப்படியே கேக்காக மாற்றியுள்ளார்.

தற்போது அவர் கேண்ட் பேக், பர்ஸ், லைட், தொப்பி, கப்போர்டு, புத்தகம் என பலவகையான பொருட்களையும் கேக் வடிவில் செய்து வருகிறார்.

இவரின் கேக் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்கள் என்னப்பா இது இப்படியும் ஒரு திறமையா என்று பாராட்டி வருகின்றனர்.

பார்ப்பதற்கு கொஞ்சமும் வித்தியாசம் தெரியாத வகையில் பொருட்களை அப்படியே அச்சு வார்த்தாற்போல் செய்த கேக்குகளைப் பார்த்து பலரும் அசந்தே போய் உள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular