நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா மூவரும் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் ஒரிரு படங்களில் நடித்துள்ளனர். த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயது கடந்தும் இன்னும் முன்னணி நடிகைகளாக திகழ்கின்றனர். இவர்கள் மூவரும் சினிமாவில் பத்து வருடங்களைக் கடந்துவிட்டனர். த்ரிஷா, நயன்தாரா 15 வருடங்களை நிறைவு செய்துவிட்டனர். தென்னிந்திய மொழி சினிமாவில் இதுவொரு சாதனையாகும்.
திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி பல தவறான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இவர்களுக்கு திருமணம் மற்றும் காதல் செய்கிறார்கள் என பல தவறான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்றும் அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று பல செய்திகள் வெளிவந்தாலும் அதை அவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. சில வருடங்களுக்கு முன் திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று பரவியுள்ளது.
அதைத் தொடர்ந்து திரிஷாவுக்கு தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் நிறுத்தி விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார் திரிஷா. தற்போது திருமணம் பற்றி திரிஷாவிடம் கேட்டபோது, நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், ‘எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ளத் தயாராக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.