Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்பழமை வாய்ந்த திருமலை திருமங்களாய் சிவன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி: கஜேந்திரன் எம்பி திடீர்...

பழமை வாய்ந்த திருமலை திருமங்களாய் சிவன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி: கஜேந்திரன் எம்பி திடீர் விஜயம்(Photos)

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த திருகோணமலை சேருவில் திருமங்களாய் ஆலயத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(07.8.2022) சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தொல்பொருட் திணைக்களம் மற்றும் அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இப்பகுதிகளில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த போதும், 1964 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்களாலும், தமிழருக்கு எதிரான வன்முறைகளாலும் அப்பகுதியிலிருந்து தமிழர்கள் வெளியேறிய நிலையில் தற்போது அடர்ந்த வனப் பகுதியாக காட்சியளிக்கின்றது.

இப் பகுதிகளில் அண்மைய ஆய்வுகளின் போது 05 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 3 கல்வெட்டுக்கள் 10-11 நூற்றாண்டுக்கு உரியது எனவும், 2 கல்வெட்டுக்கள் 14 ஆம் நூற்றாண்டுக்கு உரியதெனவும் கருதப்படுகின்றது. இந்தக் கோவிலை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருட் திணைக்களம் முயற்சிகளை எடுத்துள்ள நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular