Friday, February 3, 2023
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.நவாலியில் மர நடுகை முன்னெடுப்பு(Photos)

யாழ்.நவாலியில் மர நடுகை முன்னெடுப்பு(Photos)

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்.நவாலி மகா வித்தியாலயத்திலும், அதன் முன்பாக அமைந்துள்ள அரசடி வீதியிலும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமையும்(14.11.2022), இன்று செவ்வாய்க்கிழமையும் (15.11.2022) மரநடுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நவாலி அரசடி வீதியை சேர்ந்த அமரர்.பொன்னையா கந்தசாமியின் இரண்டாவது ஆண்டு நினைவாகப் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் சபாரத்தினம் கேதீஸ்வரனின் நிதிப் பங்களிப்பில் 30 பயன்தரு மரக் கன்றுகள் இதன்போது நடுகை செய்யப்பட்டன.

நேற்று முற்பகல்-10 மணியளவில் இடம்பெற்ற மரநடுகை ஆரம்ப நிகழ்வில் யாழ்.நவாலி மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன், நவாலி விவசாய சம்மேளனப் பொருளாளர் செ.ராஜேந்திரம், வலி. தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர்களான ஜோன் ஜிப்ரிகோ, வன்னியசேகரம், வாசன் மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந், சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மேற்படி அமைப்பினரால் நவாலி மகாவித்தியாலயத்தில் சாதாரணதரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்குப் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் அனைவருக்கும் வாசிப்புப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular