
ஆர். ஜே. பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த படம் எல். கே. ஜி. இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் எல். கே. ஜி பட இயக்குநர் பிரபுவிற்கு இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி. கே. கணேஷ் கார் ஒன்றினை பரிசாக வழங்கி உள்ளார். இத்திரைப்படம் சமீபத்தில் உள்ள அரசியல் நிலவரங்களை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் படியாக நகைச்சுவையாக சித்தரித்து உள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு இருந்து வருகிறது. படத்தின் வசூல் 15 கோடியினை தாண்டி உள்ளது.
இந்நிலையில்தான் தயாரிப்பாளர் இயக்குநருக்கு காரி ஒன்றை பரிசாக அளித்து உள்ளார். படத்தில் நடித்த படக்குழுவினருக்கும் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு பரிசு ஒன்றினை வழங்கி உள்ளது. இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே. கே .ரித்தீஷ், ராம் குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த் ராஜ், மனோ பாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து உள்ளார்.