உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று (26) முதல் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

உத்தேச சிறப்பு சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு எதிராக இவ்வாறு சேவையில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(25) உள்நாட்டு இறைவரி திணைக்கள வளாகத்தில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எவ்வாறாயினும் அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால் இன்று முதல் கடமைக்கு சமூகமளித்து தமது கடமைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க சம்மேளனத்தின் நிறைவேற்று உறுப்பினர் எச்.ஏ.எல்.உதயசிறி தெரிவித்துள்ளார்.