fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

7 மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானலில் அனுமதி!!

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கு ஏறக்குறைய 7 மாதங்களாக அமலில் இருந்தது.

இதனால் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மக்கள் வேறு எந்தக் காரணத்திற்காகவும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது, அந்த வகையில் இந்தியாவிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட வீட்டில் அடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர், அந்தவகையில் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானலில் அனுமதி!!

அதாவது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்க வேண்டி கொடைக்கானல் வனப்பகுதியில் சுற்றுலா இடங்கள் சில தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன.

இந்தவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என இரு நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வனப் பகுதியில் குவிந்து இருந்ததையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து வனப்பகுதி அலுவலர்கள் அனைவரும் மக்களைக் கட்டுக்குள் வைக்க கடுமையாகப் போராடினர்.

கொடைக்கானலில் சுற்றுலாத் தளங்களைச் சுற்றியுள்ள தொழில்கள் மீண்டும் தலைதூக்கியதால் அங்குள்ள மக்கள் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

N N

பா.ஜ.கவில் இணைந்தார் நமீதா

World News

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பட வேண்டும்… பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி!!

TT Media