fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus அமெரிக்கா உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் புலம்

கொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு

உலகெங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா அறிகுறிகளின் பட்டியலில் மேலும் 3 அறிகுறிகளை சேர்த்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப் போக்கு ஆகியனவும் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே காய்ச்சல், இருமல்,சுவாசத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி, மணம்-சுவை அறியும் திறன் இழத்தல், தொண்டை வலி ஆகியன கொரோனா அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது.

அவற்றில் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப அறிகுறிகளும், நோயின் தாக்கமும் வேறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதயவடிவில் டாங்கிகளை நிறுத்தி காதலை தெரிவித்த ரஷ்ய இராணுவ வீரர் (Video)

World News

எச்சரிக்கையாக இருங்கள்! பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் விடுத்துள்ள அறிக்கை

World News

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை 3 மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

World News