பெண்களுக்கு இமை அழகு என்பது முக்கியம், ஏனெனில் அவர்களின் முகத்தினை இன்னும் கொஞ்சம் அழகாகக் காட்டும். மேலும், புருவத்தினை திரெடிங் செய்யும் போது, மெல்லியதாக செய்வதை விட கொஞ்சம் முடிகள் இருக்கும் வண்ணம் திரெடிங் செய்வது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். இதற்கான வழிமுறைகள்.
திரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும், குறிப்பாக சுடுநீரைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும். அதன் பின் அழகுக்கலை நிபுணரை திரெட்டிங் செய்ய அனுமதியுங்கள். பிறகு சிலர் பிளேடு மூலம் புருவத்தை ஷேப் செய்வார்கள். அது தவறு அதன் மூலம் முடியை அகற்றுவதால் அந்த இடத்தில் மறுபடியும் முடிகள் அடர்த்தியாகவும் ஒழுங்கற்ற முறையில் வளரும்.

புருவத்தில் நரை தெரிந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோபென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், மாதிரியான அரோமா எண்ணெய்கள் மூலம் மசாஜ் செய்தால் முடியின் வளர்ச்சி அதிகமாகும்.