fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

திருவாரூர் – பட்டுக்கோட்டை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருவாரூர்- பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிக்கிழமை அதிவேக ரயில் சோதனை ஓட்ட ஆய்வை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மேற்கொண்டார்.

     காரைக்குடி-விழுப்புரம் இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்ற கடந்த 2007- ம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கின. இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து படிப்படியாக குறைக்கப்பட்டது. இறுதியாக 2012- ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி- பட்டுக்கோட்டை வரை பணிகள் நிறைவடைந்தது. தற்சமயம் பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அதிகவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

திருவாரூர் - பட்டுக்கோட்டை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

      காலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 10.20 மணிக்குப் புறப்பட்ட ரயில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து முற்பகல் 11.25 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த சோதனை ஒட்டம் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Related posts

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு

World News

இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து இந்தியா கண்டிக்க வேண்டும்

World News

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

World News