fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

ஆண்கள் அழகை பராமரிக்க டிப்ஸ்

பெண்கள் தான்  அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தற்போதைய ஆண்களும் தங்கள் அழகின் மீது  அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். அதிலும் இன்றைய காலத்தில் அழகு இல்லாவிட்டால், யாரும் மதிப்பதில்லை. பொதுவாக அக அழகைக் காண்பதற்கு பதிலாக புற அழகைத் தான் பலரும் முதலில் காண்கிறார்கள்.

ஆண்கள் அழகை பராமரிக்க டிப்ஸ்

          எனவே ஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங்களை சந்தித்திருந்தால், கீழே உள்ள சில அழகு குறிப்புக்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள். முக்கியமாக இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் தங்களின் அழகைப் பராமரிக்க நேரமில்லாதவர்களுக்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளாக இருக்கும்.

          பொதுவாக பல ஆண்களுக்கு காலையில் சீக்கிரமாக எழும் பழக்கமே கிடையாது.  அவர்களால் அலுவலகங்களுக்கு செல்லும் போது ஷேவிங் கூட பண்ணமுடியவில்லை. எனவே இரவிலேயே ஷேவிங் செய்துவிட்டு தூங்குங்கள்.  இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

           தூக்கமின்மையால் கண்கள் பொலிவிழந்து  கருவளையம் ஏற்படுகிறது. அப்படியெனில் சில்வர் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து குளிர்ந்ததும், கண்களின் மேல் சிறிது நேரம் ஒத்தடம் கொடுங்கள். இதனால் உங்கள் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். 

உங்களுக்கு முடியின் வளர்ச்சி குறைவாக இருந்தால், 3-4 வாரத்திற்கு ஒருமுறை ஹேர் கட் செய்து கொள்ளுங்கள். இதனால் முடி ஆரோக்கியம் மேம்படுவதோடு, உங்களின் தோற்றமும் மேம்படும்.  

சருமத்தின் அழகை அதிகரிக்க கிரீம்களைப் பயன்படுத்தும் முன், உங்கள் சருமத்தின் வகையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களைப் பயன்படுத்தி, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தலாம்.

Related posts

திக்கான, நீளமான தலை முடிக்கு வெங்காயச் சாறு ஷாம்பூ!!

N N

கண் அழகிற்கான மேக்கப்

N N

அறுவை சிகிச்சை தடயங்கள் நீங்க!!

N N