fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம்
இந்தியச் செய்திகள்

பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம்

புதுதில்லியில் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

     நிரந்தர கணக்கு என்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைத்துவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்துவிட முடியும் என்றும் அப்படி செய்யாத பட்சத்தில் மிகவும் சிரமம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறினார். கடந்த ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் நிரந்தர எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஜூன் மாதம் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.

பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம்

     இந்நிலையில் இந்தக் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 6 வது  முறையாக நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இப்போதாவது இணைத்திடுங்கள். இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த போலீசார்!!

TT Media

பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிப்பு: தமிழர் பகுதியில் கோரம்

World News

21 அடியை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி.. திறப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு..!!

TT Media