fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ‘டெட்’ எனும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் 12ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

           தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ‘டெட்’ எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நிகழாண்டுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 28ஆம் தேதி அறிவித்திருந்தது.  இந்தத் தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 15 முதல் பெறப்பட்டன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

           இந்நிலையில், இணையதளம் சரிவர வேலைசெய்யாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார் தெரிவித்திருந்தார்கள். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  மேலும், தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவிலும் வேகமெடுக்கும் கொரோனா

World News

கொரோனா பீதி: 168 ரெயில் சேவைகள் ரத்து

World News

மாணவர்களுடன் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரலில் மாற்றம்!

World News