மக்களை பாதிக்கும் டிக் டாக் பொழுதுப்போக்கு செயலியைத் தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்கிற வழக்கறிஞர் டிக் டாக் செயலி பயன்பாட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் டிக் டாக் செயலிக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால் சமூக சீரழிவு நடந்து வருகிறது. பல ஆபாச வீடியோக்கள் இதில் வலம் வருகின்றன. அதனால் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களை தடை விதிக்க நீதிமன்றத்தையே மத்திய அரசு எதிர்ப்பார்க்க கூடாது..

இதனால் விரைவில் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் டிக்-டாக் செயலிக்கு தடைவிதிப்பது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் இந்த வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.