Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்நல்லூரில் எட்டாவது நாளாகவும் திலீபனுக்கு அஞ்சலி(Photos)

நல்லூரில் எட்டாவது நாளாகவும் திலீபனுக்கு அஞ்சலி(Photos)

பன்னிரண்டு தினங்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உன்னத இலட்சியத்திற்காய் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் எட்டாம் நாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (22.9.2022) காலை-8 மணிக்கு யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவுத் தூபியடியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வீரச் சாவடைந்த பெண் கரும்புலி பைந்தமிழின் சகோதரி திருமதி.ராஜினி செளந்தரநாயகம் ஈகைச் சுடரேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உன்னத இலட்சியத்திற்காய் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கும், கடந்தகால விடுதலைப் போராட்டத்தின் போது உயிர்நீத்த அனைத்து மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தியாகதீபம் திலீபனுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் எட்டாவது நாளாகத் திலீபனின் நினைவுகளைச் சுமந்து காலை-8 மணி முதல் மாலை-5 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular