Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்திலீபனின் 35 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்திப் பவனி

திலீபனின் 35 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்திப் பவனி

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கெதிராக ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ‘திலீபன் வழியில் வருகிறோம்’ எனும் தொனிப் பொருளிலான ஊர்திப் பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி, இனப் படுகொலைக்கான சர்வதேச நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, பௌத்த-சிங்கள மயமாக்கலை நிறுத்து ஆகிய தமிழ்மக்களின் அபிலாசைகளை முன்வைத்துக் குறித்த ஊர்திப் பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊர்திப் பவனி ஆரம்பிக்கும் திகதி, மற்றும் இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினர் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular