Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நல்லூரில் ஏழாவது நாளாகவும் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி: அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுப்பு (Photos)

நல்லூரில் ஏழாவது நாளாகவும் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி: அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுப்பு (Photos)

பன்னிரண்டு தினங்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உன்னத இலட்சியத்திற்காய் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள் நிகழ்வு இன்று புதன்கிழமை(21.9.2022) காலை-8 மணிக்கு யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவுத் தூபியடியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர் கலைநிலாவின் சகோதரர் செல்வராஜா ரேகன் ஈகைச் சுடரேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் இன்றைய தினமும் ஏழாவது நாளாகத் திலீபனின் நினைவுகளைச் சுமந்து காலை-8 மணி முதல் மாலை-5 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய அஞ்சலி நிகழ்விலும், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மூத்த உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular