Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நல்லூரில் திலீபன் நினைவேந்தலைக் குழப்பத் திட்டமிட்ட சதி நடவடிக்கை: திடுக்கிடும் ஆதாரம் அம்பலம்!(Photos)

நல்லூரில் திலீபன் நினைவேந்தலைக் குழப்பத் திட்டமிட்ட சதி நடவடிக்கை: திடுக்கிடும் ஆதாரம் அம்பலம்!(Photos)

தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் நிகழ்வுகள் கடந்த-15 ஆம் திகதி ஆரம்பமாகித் தொடர்ச்சியாக எழுச்சியுடன் நல்லூரில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை(26.9.2022) திலீபன் நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு நல்லூர் தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபியடியில் இடம்பெற்ற போது பல்வேறு விரும்பத்தகாத அநாகரிகமான சம்பவங்கள் நடந்தேறியிருந்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக் கட்சியினரைப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு ஆதரவான நபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகள் கொண்டு கதைக்கும் குரல் பதிவே அது.

அதில்,கஜேந்திரனின் இதுக்கு காட்டியே ஆக வேண்டும், பிளீஸ் முன்வாருங்கோ…முன்வாருங்கோ… இரண்டு பேரை செட் பண்ணித் தந்தால் போதும். நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை கஜேந்திரனும் ரீமைக் கொண்டு வந்து இறக்குவான். ஆனா, வெளுவை தான் வேறொன்றுமில்லை. அடிச்சுப் போட்டு மைக்கைப் பறிச்சுப் போட்டு நாங்கள் எங்கட கட்டுப்பாட்டுக்குள் எடுக்க வேணும். எவன் அந்தப் பொன் மாஸ்ரர் என்ற லூசன். அவங்கட காசில சாப்பிடுறது.கஜேந்திரகுமார் காசு கொடுக்காட்டி வீட்டுக்குச் சாப்பாடில்லை…அவன் தான் பொன் மாஸ்டர்… எங்க இருந்தவன்? எனக் குறித்த குரல் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- எஸ்.ரவி)

RELATED ARTICLES

Most Popular