Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நல்லூரில் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக திடீர் வாக்குவாதம், கைகலப்பு!

நல்லூரில் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக திடீர் வாக்குவாதம், கைகலப்பு!

யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ஆதரவு அணியினருக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25.9.2022) மாலை-6.10 மணியளவில் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் யாழ்.மாநகர முதல்வர் ஆதரவு உறுப்பினரான யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவரைத் தாக்க முற்பட்ட நிலையில் கைகலப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் மற்றும் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ஆகியோர் தலையிட்டுத் தமது உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களைச் சமரசப்படுத்தி அழைத்துச் சென்றமையால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதேவேளை, அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் குறித்த சம்பவம் தொடர்பில் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- எஸ்.ரவி)

RELATED ARTICLES

Most Popular