சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. முதல் படத்திலேயே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். அதன் பின் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தது.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பிறகும் இவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இப்போது அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

படத்தில் எப்படி என்ட்ரீ கொடுப்பது என பலரிடம் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின்படி சம்பளத்தைக் குறைக்கலாம் என்று முடிவு செய்ததாக தகவல் வெளியானது. அதாவது முன்னணி நடிகர்களுடன் நடிக்க 60 முதல் 70 லட்சம் சம்பளம் வாங்கலாம் என்றும், புது முகங்களுடன் நடிக்க ஒரு கோடி ரூபாய் வாங்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ திவ்யாவிடம் இது குறித்துக் கேட்டபோது அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று மழுப்பி இருக்கிறார். பிஸியான நடிகை ஸ்ரீ திவ்யா இப்போது அனைத்து விருது விழாவிலும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆகிவிட்டதே நடிகை ஸ்ரீ திவ்யா நிலைமை என்று வலைதளங்களில் ரசிகர்கள் புலம்புகின்றனர்.