fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இதுதான்!!

தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு நாம் இதுவரை பல வகையான ஹேர்பேக்குகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் நாம் இப்போது பார்க்கப் போகும் ஹேர்பேக்கானது தலைமுடி கொட்டுதல், பொடுகுத் தொல்லை என அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாகவே இருக்கின்றது.

தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இதுதான்!!

தேவையானவை:

வெந்தயம்- 2 ஸ்பூன்

தயிர்- கால் கப்

முட்டை-2

செய்முறை:

1.         வெந்தயத்தினை தயிரில் போட்டு நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.

2.         அடுத்து அதனை மிக்சியில் போட்டு வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3.         அடுத்து அதனுடன் முட்டை சேர்த்து நுரை பொங்க அரைத்துக் கொள்ளவும். இப்போது ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து நன்கு ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி சம்பந்த்ப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.

Related posts

தலை முடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் சூப்பரான ஹேர்பேக்!!

TamilTwin India

சருமப் பொலிவிற்கு மாதுளை ஃபேஸ்பேக்!!

N N

தலைசீவும்போது கொத்தாக கொட்டும் முடியினை சரிசெய்யணுமா?

N N