fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

அனைத்துவகையான தலைமுடிப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இதுதான்!!

தலைமுடி கொட்டுதல், பொடுகுத் தொல்லை, நுனி முடி வெடித்தல், அடர்த்தி குறைந்து காணப்படுதல், வறட்சித் தன்மையான முடி எனப் பல வகையான பிரச்சினைகள் உண்டு. அவற்றிற்கான ஒரே தீர்வுதான் இந்த ஹேர்பேக், இப்போது நாம் உருளைக் கிழங்கில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அனைத்துவகையான தலைமுடிப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இதுதான்!!

தேவையானவை:

உருளைக் கிழங்கு-1

விளக்கெண்ணெய்- 10 மில்லி

எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

1.         உருளைக் கிழங்கினை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.         அடுத்து அதனை மிக்சியில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.

3.         இந்த சாறினை விளக்கெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஆறவைத்துப் பயன்படுத்தவும்.

இந்த ஹேர்பேக்கினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் பயன்படுத்தினால் நிச்சயம் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கப் பெறும்.

Related posts

வறண்ட சருமத்திற்கான வெண்டைக்காய் பேஸ்ட்!!

N N

விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

N N

குளிக்கும் போது செய்யும் தவறுகள்

N N