Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்திருநெல்வேலி முத்துமாரி அம்பாளுக்கு மஹோற்சவம்(Photos)

திருநெல்வேலி முத்துமாரி அம்பாளுக்கு மஹோற்சவம்(Photos)

யாழ்.திருநெல்வேலி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை(27.6.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் இடம்பெற்று வருகிறது.

இவ்வாலய மஹோற்சவத்தில் நாளை வெள்ளிக்கிழமை(01.7.2022) மாலை-6 மணியளவில் கைலாசவாகன உற்சவமும், நாளை மறுதினம் 2 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-6 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 4 ஆம் திகதி மாலை-6 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-8.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-6 ஆம் திகதி புதன்கிழமை காலை-7.30 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-6 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular