Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்திருக்கேதீஸ்வரத்தில் நாளை 27 அடி உயர சிவன் திருவுருவச் சிலை திறப்பு விழா: ஏற்பாடுகள் பூர்த்தி(Photos)

திருக்கேதீஸ்வரத்தில் நாளை 27 அடி உயர சிவன் திருவுருவச் சிலை திறப்பு விழா: ஏற்பாடுகள் பூர்த்தி(Photos)

சிவபூமி அறக்கட்டளை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிவபூமி பாலாவி மடம் அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவமும், சுமார்-27 அடி உயரமான சிவபெருமான் திருவுருவச் சிலை மற்றும் நந்தியெம் பெருமானின் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைக்கும் நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை(03.7.2022) காலை-9.05 மணிக்கு மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் இடம்பெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து மேற்படி அறக்கட்டளையினரால் திருக்கேதீஸ்வரம் பாலாவித் தீர்க்கரைச் சந்தியில் அமைக்கப்பட்ட சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்வு நாளை காலை-9.30 மணியளவில் திருக்கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தக்கரைச் சந்தியில் இடம்பெறும்.

சிவபூமி அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் தென்னிந்தியப் பிரபல சிற்பக் கலைஞர் புருசோத்தமன் தலைமையிலான கலைஞர்களால் மேற்படி சிவபெருமான் திருவுருவச் சிலை நேர்த்தியான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நல்லைநகர் நாவலர் பெருமானின் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகனின் சொந்தநிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் துறை விரிவுரையாளர் மனோவின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும், நிகழ்வுகள் யாவும் குறித்த நேரத்தில் இடம்பெறும் எனவும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular