fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் தெறி

                நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2017 – ம் ஆண்டு வெளியான படம் தெறி.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து இருந்தார்.  இப்படத்தில் எமி ஜாக்சனும் நடித்து இருந்தார்.  தெறி படத்திற்கு இசை அமைப்பாளர்  ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து இருந்தார்.  இப்படம் சிறந்த வரவேற்பினைப் பெற்றது.  தெறி படத்தினை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார். இப்படத்தில் விஜய் போலிஸ் அதிகாரியாக நடித்து இருந்தார்.

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் தெறி

      தெறி படத்தினை தெலுங்கில் ரிமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன எனத் தகவல்கள் வெளியாகின.  ஆனால் அதன் பின்னர் எவ்வித தகவல்களும் சரியாக வராததால் கைவிடப்பட்டது.  தற்போது இப்படத்தின் ரீமேக் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.  விஜய் கதாப்பாத்திரத்தில்  தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கிறார்.  எமி ஜாக்சன் கதாப்பாத்திரத்தில் கேத்ரின் தெரஸா நடிக்க இருக்கிறார்.  சமந்தா கதாப்பாத்திரதிற்கு முன்னணி ஹீரோயின்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  கூடிய விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரும் எனக் கூறுகின்றனர்.

Related posts

புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வித்யா பாலன்..!

TamilTwin India

என்னங்க நடக்குது நாட்டுல, கொரானா குறித்து பிக் பாஸ் சாண்டி வெளியிடும் பாடல் !

TamilTwin India

கரோனா வைரஸை எட்டி எட்டி உதைத்து சண்டையிடும் மாளவிகா மோகனன், வைரலாகும் வீடியோ!

TamilTwin India