fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

போதுமான இருப்பில் எரிபொருள்: தட்டுப்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையின் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

போதுமான அளவு நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மேலதிகமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

முலன திக்வெல என்ற இடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அடுத்த வருடத்தில் பாரிய அளவில் எரிபொருள் சுத்திகரிப்புக்கான இலக்கை இலங்கை கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்பொழுது எரிபொருள் நேரடியாக கொண்டுவரப்படுவதாகவும் நாட்டில் சுத்திகரிப்பக்கான வசதிகள் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் தெரிவித்தார். அது பெரும் நட்டமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

Related posts

மன்னார் மாவட்டத்திலும் சுமுக வாக்களிப்பு! (Photos)

TamilTwin

காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? – சுரேஷ் கேள்வி

World News

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.5 லட்சத்தை கடந்தது

World News