fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பிரான்ஸில் துயரம்: தூக்கத்தில் திடீரென உயிரிழந்த இளைஞன்!
செய்திகள் பிரான்ஸ் புலம் முக்கிய செய்திகள்

பிரான்ஸில் துயரம்: தூக்கத்தில் திடீரென உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் காரைநகர் பாலகாட்டினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று(09) பிரான்ஸில் திடீரென உயிரிழந்துள்ளார். ஏரம்புநாதன் அரவிந்தன் (வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

பிரான்ஸ் பாரிஸில் சக நண்பர்களுடன் அறை ஒன்றில் குடியிருந்த குறித்த இளைஞன் தூக்கத்தில் இருந்தபோதே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாரிஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவருடன் தங்கியிருந்த இளைஞர்களையும் விசாரணை செய்து வருகின்றனர்.

குறித்த இளைஞன் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதுடன், உயிரிழப்புக்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை பிரான்ஸில் இரண்டு கிழமைக்குள் மூன்று ஈழத்தமிழர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் தொற்றால் மேலும் 57 பேர் உயிரிழப்பு

SL News

வெள்ளத்தில் சிக்கிய பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி

SL News

நாளை பதவியேற்கிறார் கோத்தபாய ராஜபக்ச!!

TamilTwin