அமெரிக்காவிற்கான விமான சேவைகளை இடைநிறுத்திய உலகின் முக்கிய விமான நிறுவனங்கள்

5ஜி விவகாரம் காரணமாக உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

5ஜிசெல்போன் சேவைகளிற்கும் முக்கியமான விமான தொழில்நுட்பத்திற்கும் இடையிலான தொழில்நுட்ப தொடர்புகளை காரணம்காட்டி பல சர்வதேச விமானசேவைகள் அமெரிக்காவிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளன.
எமிரேட்ஸ்- எயர்இந்தியா எயர் நிப்போன் ஜப்பான் எயர்வேய்ஸ் உட்பட பல விமானநிறுவனங்கள்தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் ஒன்பது விமானநிலையங்களிற்கானசேவைகளை நிறுத்தியுள்ளதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

செயற்பாட்டு கவலைகைள தணிப்பதற்காக விமானஉற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றிவருகின்றோம் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் செயற்பாட்;டிற்கு வரவுள்ள 5ஜி சில விமானங்களின் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்இ என போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஏற்கனவே கவலை கொண்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

விமானதொழிற்துறையின் மேலும் பல குழுக்கள் இந்த கரிசனையை ஏற்றுக்கொண்டுள்ளன.

எனினும் அமெரிக்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்துனர்களும் வயர்லெஸ் தொழில்நுட்ப பிரிவினரும் இந்த அச்சம் தேவையற்றது என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சில விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள5ஜி செல்லுலார் ஆண்டெனாக்கள் – – விமானிகளுக்கு அவை தரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளன என்பதைச் சொல்ல வடிவமைக்கப்பட்ட சில விமான உபகரணங்களின் வாசிப்புகளை பாதிக்கலாம் என்று கவலைவெளியிட்டுள்ளன .

அந்த அமைப்புகள் ரேடார் அல்டிமீட்டர்கள் என அழைக்கப்படுகின்றன அவை ஒரு விமானம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன மேலும் அவை முக்கியமான உபகரணங்களாகக் கருதப்படுகின்றன.