பவர் பேங்கில் சார்ஜ் போட்டபடியே போன் பேசியபோது மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிர் இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பகுதிதான் கடப்பேரி. இந்த கடப்பேரி பகுதியை அடுத்து உள்ள திருநீர்மலைப் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது.
இந்த தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த நும்கும் குமாரி. இவருக்கு வயது 19.
நும்கும் அருகில் உள்ள சிப்காட் பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த விடுதியில் நும்கும் பவர் பேங்கில் சார்ஜ் போட்டபடி போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அன்று விடுதியில் பெயிண்டிங்க் வேலை நடந்து வந்ததையடுத்து மாடியில் இருந்த கிரில் வேலியைக் கழட்டி வைத்துள்ளனர்.
நும்கும் மாடியில் காய்ந்த துணியை எடுக்கச் சென்றபோது ஒரு துணி காற்றில் பறந்து அங்கே இருந்த சிலாப்பில் மாட்டியுள்ளது.
அப்போது போன் பேசியபடியே நும்கும் கீழே குனிந்து துணியை எடுக்க முற்பட்டபோது அங்கே இருந்த மின்சாரக் கம்பியின் உயர் அழுத்த மின்சாரம் பாய மொபைல் போனின் கதிர்வீச்சால் மொபைல் போன் வெடித்துள்ளது.
இதனால் நும்கும் குமாரி உடல் கருகிய நிலையில் தூக்கிவீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்த விடுதியில் தங்கி இருந்த பெண்கள் பதறி அடித்துச் சென்று பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.