இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தங்கை திருமணத்தில் அண்ணன் கொடுத்த கிப்ட் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கதறி அழச் செய்துள்ளது.
அதாவது ஹைதராபாத்தில் சுப்பிரமணியன் என்பவரும் அவரின் மனைவி ஜெயா என்பவரும் வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு ஹனிக்குமார் என்ற மகனும் சாய் என்ற மகளும் உள்ளனர்.
கொரோனாத் தொற்றின் போது சுப்பிரமணியனுக்கு பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
சுப்பிரமணியனின் இழப்பைத் தாங்க முடியாமல் மொத்த குடும்பமும் இருந்து வந்தநிலையில் சாய்க்கு திருமண மதன் என்னும் இஞ்சினியருரன் திருமண ஏற்பாடு செய்துள்ளார் ஹனிக்குமார்.
திருமணம் முடிந்தபின்னர் ஹனிக்குமார் தங்கைக்கு தந்தையின் மெழுகு சிலையை பரிசாக கொடுத்துள்ளார்.
தந்தையின் மெழுகுச் சிலையைப் பார்த்த மணமகள் கதறி அழ, மாப்பிள்ளை தோளின்மீது சாய்த்து தேற்றுகிறார்.
மணமகள் மட்டுமல்லாது சுப்பிரமணியனின் மனைவி மற்றும் திருமணத்துக்கு வந்திருந்த சொந்த பந்தங்கள் அனைவருமே சுப்பிரமணியனின் மெழுகுச் சிலையைக் கண்டு கண்ணீர் வடிப்பது போன்ற வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகின்றது.