fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

உத்தேச அரசியலமைப்பு யாப்பு ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம்!!

19 ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம். இதனுடாக நிறைவான ஒரு அரசியலமைப்பு அபிலாசைகளை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் எனப் பாராளுமன்றப் பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைமை அலுவலகத்தில் பாராளுமன்றப் பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும்,யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று(16) இக்கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் தமிழ்மக்களுடைய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம். அதற்காக நீண்ட காலம் போராடிக் கொண்டு தான் இருந்து வருகின்றோம்.

அதற்கான உத்தேச அரசியமைப்பு யாப்பு மூலமாக தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம். யாப்புடைய மாற்றமும் ஒரு தீர்வு தான்.

இதனைவிட தமிழர்களுக்கான விவசாயிகளுக்கான தீர்வு, வீட்டுத் திட்டத்திற்கான தீர்வு, இளைஞர்களுக்கான தீர்வு, குடிநீருக்கான தீர்வு என்ற பல்வேறு தேவைப்பாடுகளும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளும் காணப்படுகின்றன.

இந்த அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு நாங்கள் மாகாணங்களை விட எமது மாவட்டங்கள் பொருளாதார பின்னடைவினை சந்தித்துக் கொண்டு இருக்கின்றோம்.

அந்த விடயங்களையும் கரிசனை எடுத்துக் கொண்டு இவற்றினை ஏனைய மாகாணங்களுடான மாவட்டங்களில் முன்நிறுத்தி அதன் ஊடாகத் தமிழ்மக்களின் தீர்வுத் திட்டத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

விசாரணைகளின் முடிவில் உண்மைகள் வெளிவரும் ! சங்கக்கார

World News

இன்றையநாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா?- {03-01-2020}

TamilTwin

தன் மீது புகார் சுமத்திய சனம் ஷெட்டிக்கு பிக்பொக்ஸ் புகழ் தர்சன் பதில்!

World News