fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்

கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் நேற்று(04) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

தேர்தல் காலங்களில் ஒன்றைக் கூறிவிட்டு அதற்கு எதிராக செயற்பட்டதன் காரணத்தினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்காமல் வெளியேறினோம்.

கடந்த அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கூட்டமைப்பு வழங்கியதன் மூலம் இன்று கலப்பு விசாரணையும் இல்லை, சர்வதேச விசாரணையும் இல்லை. உள்ளக விசாரணை என எதுவுமே இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. இன்று அது தமிழ்மக்களை எங்கு நிறுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்த விடயம்.

கிடைத்த சந்தர்ப்பங்களை மக்களுக்காகப் பயன்படுத்தாமல் சுய இலாப அரசியலுக்காக கூட்டமைப்பின் பெயரால் ஒரு சிலர் எடுத்துகொண்டதற்கான முடிவு தான் இது. இன்று கூட்டமைப்பினர் யானை உண்ட விளாம்பழமாக வெறும் கோதாக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.

இதேவேளை, கூட்டமைப்பிற்குள் இருக்கும் குறைபாடுகளைத் திருத்தி நேர்வழியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பல முயற்சிகளை நாம் எடுத்தோம். அது முடியவில்லை. எனினும் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பணிப் பகிஷ்கரிப்பில் குதிப்பார்களா ரயில் ஊழியர்கள்?: தயார் நிலையில் இலங்கை போக்குவரத்து சபை!!

TamilTwin

போலிகளை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை

World News

நிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்

World News