fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தளபதி 63 படத்தின் கதை கசிந்தது

இளைய தளபதி விஜய் பல படங்களைத் தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வருகிற படம் தளபதி 63. இந்த படத்தின் கதை வெளியானதாக வலைத்தளங்களில் பரப்பரப்பு ஏற்பட்டு உள்ளது.

     சினிமா உலகில் இயக்குனர்களும் நடிகர்களும் அவர்களின் படத்தின் கதையைப் பற்றி வெளியே தெரியாமல் எச்சரிக்கையாக இருப்பார்கள். இதில் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் துணை நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் அனுமதிப்பது இல்லை. இதையும் மீறி பல படங்களின் கதை வெளியே கசிந்து விடுகிறது. இதைப்போல் அட்லி இயக்கத்தில் நடிக்கும் தளபதி 63 என்ற படத்தின் கதை கசிந்தாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான கதையின் விவரம்.

விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் கதை கசிந்தது

     இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராக இருக்கிறார். அவரும் கதிரும் நெருங்கிய நண்பர்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெற்று பிறகு கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். விஜயின் நண்பரான கதிர் ஒரு கட்டத்தில் மர்மமாக கொல்லப்படுகிறார். இந்த கொலைகாரர்களை கண்டுபிடிக்க விஜய் களம் இறங்குகிறார். கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

ரஜினி கூறியதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ஐஸ்வர்யா ராய் !

TamilTwin India

குட்டி தேவதை படத்தின் ‘தாமரைப்பூ சிரிப்புல’ பாடல் வீடியோ வெளியானது

TamilTwin India

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ், இதில் சாரா அலிகான் கேரக்டர் இதுவா?

TamilTwin India