அறிவுரை கூறிய தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ந்த மகன்

குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தை மகனால் கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது.

சென்னை, வெங்கட்ராமன் சாலை, சூளைப்பள்ளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (45 வயது). அவரது மனைவி சுமதி. அவரது மகன் பிரகாஷ் (வயது 20). பிரகாஷ் போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் தினமும் பிரகாஷ் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், மகன் பிரகாஷை வீட்டினை விட்டு வெளியேறி தனியாக வாழக்கூறி கண்டித்துள்ளார். இதனையடுத்து, பிரகாஷ் இப்பகுதியிலேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினத்தின் போது பிரகாஷ் தனது தாயார் சுமதியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கு செல்வம் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, தந்தை – மகன் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் இருவருக்குள்ளும் கைகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற பிரகாஷ், தனது தந்தை செல்வதை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய செல்வம் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்புகையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக செல்வத்தின் மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர், பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.