fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் அடுத்த படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

     இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி போன்றோரும் இப்டத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த நான்கு மாதங்கள் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடைபெறவுள்ளன. இப்படத்தின் 2வது லுக் போஸ்டரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

Related posts

‘சென்னைக்கு புதுசு’ வெப் சீரிஸ் ட்ரைலரை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

TamilTwin India

”கில்லி சாய்” மகளிர் நடமாடும் டீ கடையை திறந்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

TamilTwin India

பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் ரெஜினா

TamilTwin India